செப்பாக் காமம்
செட்டைகளுரித்த பாம்புகளானோம்
மூச்சிரைக்கும் சொற்களோ மகுடி
மார்பு மொட்டவிழ்ந்து மலர்கிறது
இக்கணம் நீயே அழகன்!
குருதி குதிரைப்பாய்ச்சலில்
இலக்கு நோக்கி எட்டிப்பாய்கிறது
முயங்கித் தணிகையில்
மூளைக்குள் ஒளிச்சிதறல்
முடிந்தது இனிப் போதும்
மூடிவை கணனியை
கதவுக்கு வெளியில் உலகம்
Labels: கவிதைகள்

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)