மழையிரவும் சில வரியும்
இந்த மழையிரவில்
என்னோடு விழிக்கிறது கவிதை
வெற்றுத் தாள் நிரப்ப பிரயத்தனிக்க
மண்டைக்குள் வீடு விழிக்கிறது.
படியிறங்கிப் போகும் வரிகளை
இழந்த காதலின் கண்களால்
கையாலாகாது கவனிக்கிறேன்.
அவ்வப்போது
மின்னல் கண்திறந்து
வீதிவிழுங்கி
கனத்த துளிகளால்
நிலத்தில் ஓவென்றறைகிறாய் மழையே!
ஒத்துக்கொள்கிறேனடி
உன்னைவிடக் கவிதையில்லை!
Labels: கவிதைகள்

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
1 Comments:
ஒத்துக்கொள்கிறேனடி
உன்னைவிடக் கவிதையில்லை!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home