Tuesday, March 25, 2008

பிடித்த கவிதைகளில் ஒன்று...


இவனைப் போன்ற கவிதை

இந்தக் கவிதை எழுதுகிறவன்
எத்தனை சொற்கள்
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம், பிள்ளைகளிடம்.
அடுத்த, பக்கத்து வீட்டுக்காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கைவைத்து.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது சமீபத்தில்
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.
குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்ஷாக்காரனிடம்
கூலிபேரம் பேசாமல்
இருக்கமுடிகிறதா இவனால்.

எப்போதாவது எப்போதாவது
பாடைக்கு வீசிய பூவை
கூச்சமற்றுக்
குனிந்து எடுத்துக்
கையில் வைத்துக்
கசிந்தது உண்டா?

இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனது கவிதையும்.

-கல்யாண்ஜி


Labels:

3 Comments:

At March 28, 2008 at 3:46 PM , Blogger மாதங்கி said...

படித்து ரசித்திருக்கிறேன்

 
At March 28, 2008 at 3:46 PM , Blogger மாதங்கி said...

படித்து ரசித்திருக்கிறேன்

 
At April 4, 2008 at 4:33 AM , Blogger Nanda Nachimuthu said...

எனக்கு மட்டும் தெரிகிறது
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.

என்பது போன்ற வரிகள் கண் முண் நிழலாடுகின்றன மாதவீ...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

[Valid Atom 1.0]