நல்வரவு சொல்லக் கூடாதா?

தமிழ்மண நண்பர்களுக்கு,
வாழ்வு அபத்தமானதுதான். ஆனால், அதை வாழ்ந்து கழிப்பதன்றி வேறு வழியில்லை. அதற்கு அர்த்தம் சேர்ப்பதாக நாம் கற்பித்துக்கொண்டிருக்கும் பலவற்றுள் ஒன்றான எழுத்துக்கு நன்றிகள். நாமெல்லோரும் ஒருவகையில் தனித்தவர்கள்தான். இணையத்தளம் வழியாக முகம் தெரியாதவர்களோடு பேசிக்கொண்டிருப்பதன் ஊடாக தனிமையை நாம் தள்ளிவைக்க முனைகிறோம். எழுதுவதன் மூலமாக எனக்கும் நண்பர்கள் வாய்க்கக்கூடும். குறைந்தபட்சம் எதிரிகளாவது. மனிதர்களை விட வாசிப்பு நெருக்கமாக இருந்திருக்கிறது. அப்படி உங்கள் மனங்களிலும் ஒருகணமேனும் எனது எழுத்து சலனத்தை ஏற்படுத்துமெனில் மகிழ்வேன். ஏற்படுத்தாது போனாலும் நான் என்னதான் செய்யவியலும்?
வைகை
Labels: அறிமுகம்

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
2 Comments:
i think you have write atleast 3 posts before you register in thamizmanam.
Venkat.
நன்றி வெங்கட்,
நான்கு பதிவுகள் போட்டுவிட்டேன். கருவிப்பட்டையையும் சரியாகவே இணைத்திருப்பதாக நினைக்கிறேன். இன்னமும் தமிழ்மணத்தில் சேர்க்கப்படவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home