இரண்டாவது காதல்

ஈற்றில் இவ்விதம் முடிந்தது
கண்ணீரின் ஈரம் உலராத
கைக்குட்டைகளைக் காற்றில் அசைக்கிறோம்.
கைக்குட்டைகளைக் காற்றில் அசைக்கிறோம்.
'துரோகம்'என்ற தீர்ப்பெழுதி
ஊர் கலைந்து போனது
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஊர் கலைந்து போனது
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட குடும்பத்தில்
இனி நாட்களெல்லாம்
கொட்டும் தேள்களாகும்.
உன் நினைவிற்கும்
கண்ணீர்த்துளிக்கும்
இடையறாத போட்டி
இருந்தும்
மனதை முந்திவிடுகின்றன விழிகள்.
பரவாயில்லை அன்பே!
உன் நினைவிற்கும்
கண்ணீர்த்துளிக்கும்
இடையறாத போட்டி
இருந்தும்
மனதை முந்திவிடுகின்றன விழிகள்.
பரவாயில்லை அன்பே!
காலம் மூடிய
ஞாபகப்பேழையை
பூமிக்கடியிலிருந்து
நமது குழந்தைகளேனும் கண்டுபிடிக்கட்டும்.
பூமிக்கடியிலிருந்து
நமது குழந்தைகளேனும் கண்டுபிடிக்கட்டும்.
Labels: கவிதைகள்

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
1 Comments:
வைகை,
நல்லா இருக்கு கவிதை. மேலும் எழுதுங்களேன். கீழே உள்ள கல்யாண்ஜி கவிதையும் பிரமாதம்.
அனுஜன்யா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home