Friday, December 28, 2007

செப்பாக் காமம்

செட்டைகளுரித்த பாம்புகளானோம்
மூச்சிரைக்கும் சொற்களோ மகுடி
மார்பு மொட்டவிழ்ந்து மலர்கிறது
இக்கணம் நீயே அழகன்!
குருதி குதிரைப்பாய்ச்சலில்
இலக்கு நோக்கி எட்டிப்பாய்கிறது
முயங்கித் தணிகையில்
மூளைக்குள் ஒளிச்சிதறல்
முடிந்தது இனிப் போதும்
மூடிவை கணனியை
கதவுக்கு வெளியில் உலகம்

Labels:

6 Comments:

At March 9, 2008 at 7:55 AM , Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாகவிருக்கிறது.

-மதி

p.s.: could you pls take off word verification (as you have enabled comment moderation)?

 
At March 10, 2008 at 10:13 AM , Blogger வைகை said...

நன்றி மதி கந்தசாமி! முதன்முதலாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல செய்திருக்கிறேன். தமிழ்மணத்தில் இன்னும் எனது பக்கம் இணைக்கப்படவில்லை. எப்படி வந்தீர்கள் என்று கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

 
At March 24, 2008 at 9:08 PM , Blogger Ayyanar Viswanath said...

Good one...

 
At March 25, 2008 at 6:39 AM , Blogger வைகை said...

நன்றி அய்யனார்.

 
At March 25, 2008 at 8:54 PM , Blogger தமிழ் சசி | Tamil SASI said...

நல்ல கவிதை...

 
At March 25, 2008 at 11:58 PM , Blogger வைகை said...

நன்றி தமிழ் சசி!கணனிச் சட்டகத்தை மீறி வெளியில் ஒரு உலகம் இயங்குகிறது அல்லவா...? இருந்திருந்தாற்போல கண்திறக்கும் அவ்வுலகம்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

[Valid Atom 1.0]